AirMedia BroadCast - BROADCAST YOUR BUSINESS TO THE WORLD

“அட்சய திருதியை” முன்னிட்டு நமது வனாலயத்தில் வனம் பஞ்சபூத வழிபாட்டுக் கூட்டு பிரார்த்தனை – இந்தியா பவுண்டேசன்

 “அட்சய திருதியை” முன்னிட்டு நமது வனாலயத்தில் வனம் பஞ்சபூத வழிபாட்டுக் கூட்டு பிரார்த்தனை – இந்தியா பவுண்டேசன்

அன்புடையீர்

வணக்கம்.

வாழ்க! வளமுடன்!

வனம் இந்தியா பவுண்டேசன் நிர்வாகிகள் அறிவுறுத்தலின்படி இன்று 26.04.2020 ஞாயிற்றுக்கிழமையன்று “அட்சய திருதியை” முன்னிட்டு நமது வனாலயத்தில் வனம் பஞ்சபூத வழிபாட்டுக் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.

மத்திய மாநில அரசு ஆணைக்கினங்க சமூக விலகலை கடைப்பிடிக்கும் வண்ணம் வனம் பொருளாளர் திரு.R.விஸ்வநாதன், விரிவாக்கத்துறை இயக்குநர் திரு, K.M.ஈஸ்வரமூர்த்தி, ஊடகத்துறை இயக்குநர் திரு. TMS பழனிச்சாமி, வனம் அலுவலர்கள் திரு.B.பன்னீர்செல்வம் மற்றும் திருமதி.B.விஜி என ஐந்து பேர் மட்டும் வனாலயத்திற்கு நேரில் வருகை தந்து தனித்தனியாக இடைவெளியை கடைபிடித்து பிரார்த்தனை கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

மற்ற வனம் நிர்வாகிகள், இயக்குநர்கள் மற்றும் உறுப்பினர்கள் காணொளிக்காட்சி மூலம் பங்கேற்று பிரார்த்தனை கூட்டத்தில் கலந்துக்கொண்டு வழிபாடு மேற்கொண்டனர். வனம் அமைப்பின் செயலாளர் திரு.ஸ்கை.வே.சுந்தரராஜ் அவர்கள் அலைப்பேசி வழியாக உலக நன்மை வேண்டியும், வான் மழை வேண்டியும், பசுமைப்படரவும் பஞ்சபூத வழிபாட்டு பிரார்த்தனை செய்தார். ஆன்மீகம் மற்றும் இலக்கியத்துறை இயக்குநர் திரு.V.அனந்தகிருஷ்ணன் அவர்கள் அட்சய திருதியை பற்றி விளக்கிக்கூறி பிரார்த்தனை செய்தார். பொருளாளர் திரு.R.விஸ்வநாதன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

AirMedia Broadcast

https://airmedia.in/

Related post