Airmedia Broadcast Solutions Pvt Ltd - An Authorized Dealer Possession License (DPL)

சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் பகுதியில் இயங்கி வரும் புனித குவனெல்லா அன்பகம் சிறப்பு பள்ளியும், காரைக்குடி பகுதியில் இயங்கிவரும் மகிழ்ச்சி ரியல் புரோமோட்டர்ஸ் நிறுவனமும் இணைந்து இன்று 15/04/2020 புதன்கிழமை காலை 9.30 மணி அளவில் காளையார் கோவில் சுற்று வட்டாரத்தில் வசித்து வரும் வாழ்வாதாரத்தை இழந்து வருமானம் இல்லாமல் வாடும் எளிய 100 குடும்பங்களை தேர்வு செய்து அவர்களுக்கு 20 நாட்களுக்கு தேவையான அரிசி பருப்பு எண்ணெய் போன்ற அத்தியாவசிய மளிகைப் பொருட்களை இன்று வழங்கியுள்ளார்கள் காளையார்கோவில் வட்டாட்சியர் மற்றும் கிராம அதிகாரி அவர்களின் முன்னிலையில் இந்த இனிய உதவி வழங்கும் விழா அனைத்து குடும்பத்திற்கும் மகிழ்ச்சி தரும் வகையில் இனிதே நடைபெற்றது….