AirMedia BroadCast - BROADCAST YOUR BUSINESS TO THE WORLD

Dr. S.N.S.Rajalakshmi of Arts and Sciences College Pongal Festival was celebrated at S.N.S. Rajalakshmi College,Coimbatore.

 Dr. S.N.S.Rajalakshmi of Arts and Sciences College Pongal  Festival was celebrated  at S.N.S. Rajalakshmi College,Coimbatore.

கோயம்புத்தூர், டாக்டர் எஸ். என். எஸ் இராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரியில் 13.1.2023 அன்று  பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கல்லூரியின் தாளாளர் மருத்துவர் எஸ். இராஜலட்சுமி அவர்கள் பொங்கல் விழாவினையும் விளையாட்டுப் போட்டிகளையும் தொடங்கி வைக்க பேராசிரியர்களும் மாணவ மாணவிகளும் துறைவாரியாக பொங்கலிட்டு விழாவினைச் சிறப்பித்தனர். விழாவில் மாணவ மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும், அலுவலகப் பணியாளர்களுக்கும் கயிறு இழுக்கும் போட்டி, உரியடித்தல், இசை நாற்காலி, கோலப்போட்டி போன்ற  பல்வேறு  விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும்  வழங்கப்பட்டன. மேலும் பாரம்பரிய உணவுத் திருவிழா, நாட்டுப்புற விளையாட்டுப் பொருட்கள் கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடத்தப்பட்டன. இப் பொங்கல் விழா கொண்டாட்டத்தில் எஸ். என். எஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் முனைவர் எஸ். என்.  சுப்பிரமணியன், எஸ். என். எஸ் கல்வி நிறுவனங்களின் செயலர் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் முனைவர் எஸ். நளின் விமல் குமார், எஸ். என். எஸ் கல்வி நிறுவனங்களின் முதன்மைச் செயல் அதிகாரி முனைவர் மு. டேனியல்    கல்லூரியின் முதல்வர் முனைவர்  இரா. அனிதா,  துணை முதல்வர் முனைவர் ப. நரேஷ்  குமார், முதுகலை வணிகவியல் மேலாண்மைத்  துறை இயக்குனர் முனைவர் ஜி.ஞானசேகரன்
புலமுதன்மையர் முனைவர் செ.பழனிச்சாமி   ஆகியோரும் கலந்துகொண்டு விழாவினைச்  சிறப்பித்தனர். இப்பொங்கல் விழாவினை தமிழ்த்துறை  இணைப்  பேராசிரியர் முனைவர் அ.சேமலா  வசந்தா மற்றும் இயற்பியல் துறைத் தலைவர் முனைவர் து. பிரதாபன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

AirMedia Broadcast

https://airmedia.in/

Related post