Airmedia Broadcast - An Authorized Dealer Possession License (DPL)

உடுமலையில் நரி வேட்டை (FOX HUNT) நரி வேட்டை என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? வரும் அக்டோபர் 2, 2022 அன்று இந்த நரி வேட்டை உடுமலைப் பேட்டையில் நடைபெற உள்ளது. உடுமலைப் பேட்டையில் எங்கே நரிகள் உள்ளது? என்று ஆச்சரியப்பட வேண்டாம். நரி வேட்டைக்கும் வானொலிக்கும் ஒரு தொடர்புள்ளது. இங்கு நரி என்பது வானொலி ஒலிபரப்பிகளைக் (டிரான்ஸ்மிட்டர்). குறிக்கும். ஹாம் வானொலியில் இது ஒரு வகையான விளையாட்டு ஆகும்.

டிரான்ஸ்மிட்டர் வேட்டை (டி-வேட்டை, என்றும் அறியப்படுகிறது), இதில் பங்கேற்பாளர்கள் ரேடியோ திசைக் கண்டறியும் ஆன்டனாக்களைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்டத் பகுதியில் மறைந்திருக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ரேடியோ டிரான்ஸ்மிட்டர்களைக் கண்டறியும் ஒரு செயலாகும். இந்த செயல்பாடு ஹாம் (அமெச்சூர்) வானொலி ஆர்வலர்களிடையே மிகவும் பிரபலமானதாகக் உள்ளது. இது தான் வரும் அக்டோபர் 2, 2022 அன்று உடுமலை அமேச்சூர் கிளப்பால் நடத்தப்படுகிறது. மேலதிக விபரங்களுக்கு 99655 61041.(தகவல்: தங்க.ஜெய் சக்திவேல்)