அன்புடையீர்
வணக்கம்
வாழ்க! வளமுடன்!
இன்று 13.09.2022 செவ்வாய்கிழமை, நமது வனாலயத்தில் நடைபெற்ற வாராந்திர கலந்தாய்வு கூட்டத்தில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்கள் Yarn Marchent திரு.M.திருமேனி, Visual Effect Media திரு.D.ரவிக்குமார், VAT Builders திரு.T.சரவணகுமார், பிரபு சைசிங் மில் திரு.பெரியசாமி ஆகியோர் இணைந்து மூவர் முற்றத்திலுள்ள திருவள்ளுவர், மகாத்மா காந்தி மற்றும் டாக்டர் அப்துல் கலாம் திருவுருவ சிலைகளுக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். திரு.M.திருமேனி அவர்கள் தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினர். அதனைதொடர்ந்து மூலிகை வனத்தில் மூலிகை செடி நடவு செய்தும், நட்சத்திர வனத்தில் பூஜை செய்தும் அனைவரும் கூட்டத்தில் கலந்துகொண்டனர். வனம் செயலாளர் திரு.ஸ்கை.வே.சுந்தரராஜ் அவர்கள் மழை வேண்டி தவம் இயற்றி, வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினர்கள், அறம் அறக்கட்டளை உறுப்பினர்கள், வனம் நிர்வாகிகள், அறங்காவலர்கள், இயக்குநர்கள் கலந்துகொண்டு பசுமை சார்ந்த அனுபவங்களையும், கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டனர். பொருளாளர் திரு.R.விஸ்வநாதன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.