Routledge published an important book on radio last month
வானொலித் தொடர்பாக மற்றும் ஒரு முக்கிய புத்தகத்தினை ரட்லெட்ஜ் (Routledge) பதிப்பகம் கடந்த மாதம் வெளியிட்டுள்ளது. நான் பல வருடங்களாக சொல்லி வந்ததையே இந்த புத்தகத்தின் தலைப்பாக வைத்துள்ளனர்.
வானொலி என்றுமே தமக்கான வெளியைக் கட்டமைத்துக்கொள்ளும் என்பதற்கு இந்த The Routledge companion to radio and podcast studies எனும் தலைப்பே உதாரணம்.
அடுத்தகட்டத்திற்கு எப்படி வானொலி பயணித்துள்ளது என்பதை உலகம் முழுவதும் இருந்து பல ஆய்வாளர்களும் விரிவான கட்டுரைகளை இதில் எழுதியுள்ளனர்.
இந்தியாவில் இருந்து ஹைத்ராபாத் பல்கலைக்கழத்தின் வினோத் பவ்ரளா, கஞ்சன் மாலிக் குழு ஒரு சிறப்பான கட்டுரையை வடித்துள்ளனர்.
சமூக ஊடக காலத்திலும் வானொலிக்கு ஒரு இடம் நிச்சயம் உண்டு என்பதற்கு இந்த நூல் ஒரு சான்று.
தொடக்க கால வானொலியில் இருந்து இன்றைய பாட்காஸ்டிங் வரை எப்படி தன்னை தகவமைத்துக் கொண்டது என்பதை விரிவாக அலசுகிறது இந்த புத்தகம்.
தொகுத்த மியா லின்க்ரெம் மற்றும் ஜெசன் லெவ்கிலியோவுக்கும், வெளியிட்ட ரட்லெட்ஜ் பதிப்பகத்திற்கும் வாழ்த்துகள்.(தகவல்: தங்க.ஜெய் சக்திவேல்)