Airmedia Broadcast Solutions Pvt Ltd - An Authorized Dealer Possession License (DPL)

SUPER WOMEN DALMIA SHEROES PRIDE 2021

 SUPER WOMEN DALMIA SHEROES PRIDE 2021

Marudhani பெண் Arts and Classes.

திருமதி. மைதிலி கணேஷ்குமார் (B.sc, MBA)

Contact: 7397523459

சிகரம் தொடுகின்ற பெண்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே  செல்வது பெரும் மகிழ்ச்சிக்குரிய ஒன்று..!

சமீபத்தில்  மகளிர் தினத்தை சிறப்பித்து கோயம்புத்தூரை சேர்ந்த, திருமதி. மைதிலி கணேஷ்குமார் அவர்களுக்கு, Dalmia Cement நிறுவனம் -“SUPER WOMEN DALMIA SHEROES PRIDE 2021” விருதை வழங்கி  கவுரவித்தது.

சமூக செயல்பாடுகள், பொருளாதார மேம்பாடு, பொழுதுபோக்கு, விளையாட்டு, தொழில் துறை,  என சகல துறைகளிலும் இன்று பெண்களின் பங்களிப்பு மேலோங்கி இருக்கின்றது. இந்த கோவை பெண்மணிக்கு  அங்கீகாரம் கிடைக்க சில முக்கிய காரணங்கள் உண்டு.

மெஹந்தி டிசைன் வடிவமைப்பதிலும் அக்கலையை  மற்றவர்களுக்கு கற்பிப்பதிலும் தேர்ந்தவர் தான் திருமதி மைதிலி கணேஷ்குமார்.

சில தனித்தன்மைகள் கொண்ட மெஹந்தி டிசைன்களை உருவாக்குவதில் வல்லவரான இவர் சில சமூக சேவை சார்ந்த செய்லகளையும் செய்து வருகிறார்.

இயற்கை மருதாணியில் ஆரம்பித்த இவரது ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாக மெருகேறி தற்போது  ஒரு தொழில்முறை மெஹந்தி கலைஞர் ஆக மாற்றிவிட்டது.

  • B.Sc(Fashion Designing) மற்றும் MBA படித்துள்ள இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக  Marudhani பெண் Arts and Classes என்ற பெயரில் கோவையில் கலைக்கூடம் (Academy)நடத்தி வருகிறார்.
  • இவரது கணவர் கட்டுமானங்கள் மற்றும் வர்த்தக துறையில் தொழில் செய்து வருகிறார்.
  • தற்போது இரண்டரை வயதில் உள்ள தனது செல்ல  குழந்தையுடன் கொரோனா விடுமுறை நேரங்களை கழித்து வருகிறார். 

இவரது தொழில் திறன் சிறப்பம்சங்கள் 

( தொழில்முறை மெஹந்தி கலை )

தனது பள்ளி பருவத்தில் பெற்றோருடன் கோவிலுக்கு செல்கின்ற பொழுதெல்லாம் அங்கே இருக்கும் நமது முன்னோர்களின் கலை நயங்கள் மற்றும் சிலைகளின் வடிவமைப்புகளும் தன்னை ஈர்த்தாக நம்முடன் பகிர்ந்தார்.

மேலும் இந்த டிசைன் ஆர்வம் இன்றளவும் இருப்பதால் தான் தனது மெஹந்தி கலையில் தன்னை மெருகேற்றி இக்கலையில் தனிச்சிறப்பு ஏற்பட உதவியாக இருக்கிறது என்றார்.

பொதுவாக மெஹந்தி என்றதும் மருதாணி மற்றும் வித விதமான மெஹந்தி டிசைன்கள் தான் மனதில் தோன்றும். திருமணம், பிறந்தநாள் மற்றும் பண்டிகை நாட்கள் மட்டுமின்றி எல்லா நாட்களிலுமே அனைத்து பெண்களும் மெஹந்தி போட்டுக்கொள்ள விரும்புவார்கள். வித விதமான மெஹந்தி டிசைன்கள் இருந்தாலும் தொழில்முறை மெஹந்தி டிசைன் கலைஞரான  இவர், மெஹந்தி கலையில் தனித்துவம் கொண்டவர்.

உதாரணமாக மணப்பெண் மற்றும் மணமகன் முக அமைப்பை (உருவத்தை) அப்படியே மெஹந்தியில் டிசைனாக கொண்டு வருவது போன்ற கலைநயம் கொண்டவர்.

சென்னை, திருப்பூர், ஈரோடு என பிற மாவட்டங்களில் இருந்தும்  இவரிடம் மாணவிகள் மெஹந்தி கலையை பயின்று வருகின்றனர்.

இவரிடம் பயிலும் மாணவிகளுக்கு இவர் டிசைன் கற்றுக் கொடுப்பதில்லை. மாறாக  அதற்கான கருத்து புரிதல்களையும் அமைப்பு வழிமுறைகளையும் கற்று தருகிறார் [ Concept Training ].

இது மாதிரியான பயிற்றுவித்தல் மூலம் மாணவிகள் சுயமாகவே தேவைக்கேற்ற வடிவங்களையும் புது புது டிசைன்களையும் உருவாக்க முடியும் என்பதே இவரது நோக்கம்.

எனக்கு வரையவே முடியாது என்னால் வரைவதற்கு சுத்தமாக வராது என்றெல்லாம் குழப்பமான சிந்தனையுடன் இவரை அணுகிய பல மாணவிகள், இவரது பறிச்சிக்கு பின்  தற்போது, மெஹந்தி  டிசைன் இல் கலக்கி வருகிறார்கள்.

நமது  கோவில்களில் காணப்படும், கலாச்சார வடிவமைப்புகள் கொண்ட சிலைகள் போன்றவற்றில் உள்ள முந்தயகால பண்பாடு, விலங்குகளின் உருவங்கள் , தீபங்கள் மற்றும் சங்க கால மன்னர்களின் தோற்றங்கள் போன்றவற்றை எளிதில் இவர் மெஹந்தி டிசைன் ஆக உருவாக்குகிறார் –

பாரம்பரிய பண்பாடுகளை உணர்த்தும் கலைநயங்களை மெஹந்தி டிசைனில் கொண்டுவருவதில் கைதேர்ந்தவர், இதுவே இவரது தொழில் திறமையையும் கலை ஆர்வத்தையும் காட்டுகிறது.

மேலும் இசைக்கருவிகள் மற்றும் நடனங்களின் அசைவுகள்  போன்றவற்றை தத்ரூபமாக மெஹந்தியாக கொண்டு வருவதும் இவரது கைகளின் கலை ஆற்றலை வெளிப்படுத்துகிறது 

இவரது சமூக செயல்பாடு:

பொதுவாக சமூகம் சார்ந்த செயல்பாடுகளுக்கு பெண்கள் முன்னுரிமை அளிப்பது குறைவே. ஆனால் இதில் மற்ற பெண்களுக்கு ஒரு முன்னோடியாக திகழ்கிறார் திருமதி. மைதிலி கணேஷ்குமார்.

கோவையில் ஒரு சில இடங்களில் 10  ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு படித்து வரும் ஒரு சில மாணவிகளுக்கு, அதாவது மேற்படிப்பை மேற்கொள்ள முடியாத வறுமை நிலையில் உள்ள மாணவிகளுக்கு இலவசமாக இந்த கலையை ( மெஹந்தி டிசைன் ) கற்று தந்து வருகிறார்.

மேலும் அந்த மாணவிகளின் பொருளாத சூழ்நிலையை முன்னெடுத்து கொண்டு செல்லும் நோக்கில், தான் கற்று கொடுத்த அதே மெஹந்தி டிசைன் கலையை ஒரு தொழிலாக எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதையும் பயிற்சி கொடுத்து நிறைய மாணவிகளுக்கு பெரும் ஆதரவாக இருக்கிறார்.

விழா காலங்களிலும் மற்ற சிறப்பு பண்டிகை நாட்களிலும் பெண் குழந்தைகள் உள்ள அறக்கட்டளைகள் மற்றும் தொண்டு அமைப்புகளுக்கு சென்று அங்கு உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு  👩🏻🎓 மெஹந்தி போட்டு அக்குழந்தைகளை மகிழ்ச்சி படுத்தி வருகிறார். இவரது குழு நண்பர்களின் ஒத்துழைப்புடன் சேவை மனப்பான்மையுடன் வெற்றிகரமாக தொடர்ந்து வருகிறார். கற்பனை உருவங்களுக்கும்  உயிர் கொடுக்க முடியும் இவரை போன்ற கலைஞர்களால். நன்றி.

AirMedia Broadcast Solutions (P) Ltd

https://airmedia.in/

Related post