
Declaring the holy birth anniversary of the Guru Maha Sannidhanam of Siravai Adheenam as World Palm Tree Planting Day - Vanam India Foundation
சிரவை ஆதீனம் குரு மகா சன்னிதானங்களின் அவதாரத் திருநாளை உலகப் பனை நடும் நாளாக அறிவித்து, பனை மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி பேரூர் ஆதீனம் திருமடத்தில் நடைபெற்றது. சுமங்கலி ஜூவல்லர்ஸ் பேராதரவில், வனம் தலைவர் சுவாதி திரு.K.சின்னசாமி அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வனம் செயலாளர் திரு.ஸ்கை.வே.சுந்தரராஜ் தவம் இயற்றினார். ஆன்மீகம் மற்றும் இலக்கியத்துறை இயக்குநர், ஞானபாரதி திரு.வெ.அனந்தகிருஷ்ணன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையுரையாற்றினார். கோவை சுமங்கலி ஜூவல்லர்ஸ் நிர்வாக இயக்குநர் திரு.V.செந்தில்குமார் அவர்கள் சிறப்புரை வழங்கினார். தென்சேரி ஆதீனம், திருப்பெருந்திரு.முத்துசிவ ராமசாமி அடிகளார் வாழ்த்துரை வழங்கினார். ஈஷா அறக்கட்டளை, செயல்பாட்டுத் தலைவர் சுவாமி ஸ்ரீமுகா அவர்கள் ஆசியுரை வழங்கினார். அமெரிக்காவை சார்ந்த திரு.க்ரிஷ் மணி அவர்கள் தான் எழுதிய ‘அனைவரும் அறிவோம் சனாதனம்’ நூலினை வெளியிட்டு நூல் அறிமுகவுரையாற்றினார். மேலும், இந்நிகழ்வில், சென்னிமலை முருகன் புலவராற்றுப்படை, சினந்தெழுந்தான் சின்னமலை, சென்னிமலை தலபுராணம், சுப்பிரமணியன் மணம் முடிந்த வள்ளி அம்மன் கும்மி, பவள கொடி கும்மி ஆகிய நூல்களையும் வெளியீடு செய்தனர். பொருளாளர் திரு.R.விஸ்வநாதன் அவர்கள் நன்றியுரை வழங்கினார். அனைவரும் இணைந்து திருமடம் வளாகத்தில் பனை மரக்கன்றுகள் நடவு செய்து இயற்கையை போற்றி வணங்கினர். இணைசெயலாளர்கள் திரு.A.நடராஜன் மற்றும் திரு.K.M.ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். இந்நிகழ்வில், வனம் நிர்வாகிகள், இயக்குநர்கள், அறங்காவலர்கள், பேரூர் ஆதீனம் நிர்வாகிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பல கலந்துகொண்டனர். நன்றி TMS, வனம் ஊடகத்துறை
Interested in community radio, AMC, or broadcast support?
