AirMedia Logo
All News
National Model Senior Secondary School , Coimbatore -இன்ட்ராக்ட் கிளப் நிர்வாகிகள் பதவியேற்பு விழா

National Model Senior Secondary School , Coimbatore -இன்ட்ராக்ட் கிளப் நிர்வாகிகள் பதவியேற்பு விழா

HighlightedAirMedia News3 views

கோயம்புத்தூர்:கோவை மாவட்ட இன்ட்ராக்ட் கிளப் சார்பில், 2026–27ஆம் ஆண்டிற்கான மாவட்ட பேரவை மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஆகஸ்ட் 5 புதன் கிழமை கோவை நேஷனல் மாடல் மேல்நிலைப் பள்ளி அரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவில் கோவை நேஷனல் மாடல் மேல்நிலைப் பள்ளி மாணவரான மிதுன் P. V, கோவை மாவட்ட இன்ட்ராக்ட் அமைப்பின் மாணவ நிர்வாகியாகத் (DIR) பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் இணைந்து புதிய தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர்களும் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டனர்.

விழாவில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் Rtn. R. S. மாருதி முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார். மேலும், இளைஞர் சேவைப் பிரிவின் மாவட்டத் தலைவர் Rtn. ஜஸ்டின் பிரேம்குமார் சிறப்பு விருந்தினராகவும், ஆர்.சி.சி வெஸ்ட் தலைவர் Rtn. சந்திரசேகர் சிறப்பு அழைப்பாளராகவும் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.இன்ட்ராக்ட் கிளப்பின் கோவை மாவட்ட தலைவரான ஹென்றி அமல்ராஜ் அவர்கள் இவ்விழாவை ஓருங்கிணைத்து நடத்தினார்.

இவ்விழாவில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு பள்ளிகளிலிருந்தும் திரளான இன்ட்ராக்ட் கிளப் மாணவர்கள் மற்றும் ரோட்டரி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Released By Kavitha Krishnamoorthy - PRO - National Model Senior Secondary School, CBE

For news tips, coverage requests, or media enquiries, email us at airmedianews@gmail.com.