AirMedia Logo
All News
The consultative meeting and felicitation ceremony of the Kodai FM Radio Listeners' Association were held successfully-கோடை பண்பலை வானொலி நேயர் பேரவையின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது

The consultative meeting and felicitation ceremony of the Kodai FM Radio Listeners' Association were held successfully-கோடை பண்பலை வானொலி நேயர் பேரவையின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது

HighlightedFM Radio6 views

Kodai Panpalai 100.5 FM Radio Listeners’ Association Meeting Successfully Held The Kodai Panpalai 100.5 FM Radio Listeners’ Association successfully organized a Consultative Meeting, Felicitation Ceremony, and Listeners’ Meet on Sunday, 11 October 2026, at 4:00 PM at Annai Bakery, Vijayamangalam.

Long-time listeners of Kodai Panpalai and members of the Listeners’ Association enthusiastically participated in the event. Various topics were discussed, including the importance and special features of radio broadcasting, strengthening the relationship between the radio station and its listeners, and planning the future activities of the Listeners’ Association.

The participants also exchanged views on bringing radio listeners together, promoting social harmony, encouraging information sharing, and preserving and developing radio-listening culture.

As part of the event, a felicitation ceremony was held to recognize and appreciate the contributions of listeners and association members who have remained actively connected with Kodai Panpalai.

One of the highlights of the event was the opportunity for listeners to meet in person after a long interval and share their memorable experiences, thoughts, and fond memories associated with radio.

The Kodai Panpalai Radio Listeners’ Association expressed its sincere gratitude to everyone who participated and contributed to the successful completion of the event. “Listen to Radio! Enrich Your Life!” – Kodai Panpalai Radio Listeners’ Association,

கோடை பண்பலை 100.5 FM வானொலி நேயர் பேரவை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆலோசனைக் கூட்டம், பாராட்டு விழா மற்றும் நேயர்கள் சந்திப்பு நிகழ்ச்சி 11.10.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு விஜயமங்கலம், அன்னை பேக்கரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. கோடை பண்பலை வானொலியின் நீண்டகால நேயர்கள் மற்றும் பேரவை உறுப்பினர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில், வானொலி ஒலிபரப்பின் சிறப்புகள், நேயர்களுக்கும் வானொலிக்கும் இடையேயான தொடர்பை மேலும் வலுப்படுத்துவது, நேயர் பேரவையின் எதிர்கால செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

மேலும், வானொலி நேயர்களை ஒருங்கிணைத்து சமூக நல்லிணக்கம், தகவல் பகிர்வு மற்றும் வானொலி நேயர் கலாசாரத்தை தொடர்ந்து வளர்ப்பது குறித்தும் கருத்துகள் பரிமாறப்பட்டன. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற பாராட்டு விழாவில், கோடை பண்பலை வானொலியுடன் தொடர்ந்து இணைந்து செயல்பட்டு வரும் நேயர்கள் மற்றும் பேரவை உறுப்பினர்களின் பங்களிப்புகள் பாராட்டப்பட்டன.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேயர்கள் நேரில் சந்தித்து தங்களது வானொலி அனுபவங்களையும் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டது நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக அமைந்தது. கலந்துகொண்ட அனைவருக்கும் கோடை பண்பலை வானொலி நேயர் பேரவை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. “வானொலி கேளுங்கள்! வாழ்வில் வளம் பெறுங்கள்,

– கோடை பண்பலை வானொலி நேயர் பேரவை

Photos

More moments from this story

For news tips, coverage requests, or media enquiries, email us at airmedianews@gmail.com.